டி.ஆர்.இ.யு.வின் 100வது ஆண்டு விழா! நாகப்பட்டினத்தில் உற்சாகத்துடன் துவக்கம்!
 
Quick Touch


Latest News
Slide Show

:: Home

 

 centenary 1

 

 

 

1.2.2017 அன்று டில்லி ஜந்தர் மந்தரில்

டி.ஆர்.இ.யு நடத்திய நாடாளுமன்ற பேரணி

===============================

குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000, 5 சதவீதம் இன்கிரிமென்ட்,  5 பதவி உயர்வு, 3.71 மடங்கு பிக்சேஷன் பெனிபிட், வருமானவரி உச்சவரம்பை உயர்த்துதல், காலியிடங்கள் நிரப்புதல், தனியார்மயம், 100 சதம் அந்நிய நேரடி முதலீடு கூடாது என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  பிப்ரவரி 1, 2017 அன்று காலை தலைநகர் டில்லி, ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

 

d3 (Small)

 

d9 (Small)

 

d8 (Small)

 

d1 (Small)

  

d2 (Small)

 

d4 (Small)

 

 

 

 

 

 

டி.ஆர்.இ.யு. பிரம்மாண்ட வெற்றி!

சதர்ன் ரெயில்வே எம்ப்ளாயீ கன்ஸ்யூமர் கோ ஆப்பரேட்டீவ் சொசைட்டி தென்னக ரெயில்வேயின் திருவனந்தபுரம் டிவிசனில் எர்ணாகுளத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

அதில் 17.1.2017 அன்று 9 இயக்குநர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் டி.ஆர்.இ.யு. ஒன்பது இடங்களிலும் போட்டியிட்டது.

டி.ஆர்.இ.யு.வை எதிர்த்து சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் மற்றும் சதர்ன் ரெயில்வே எம்ப்ளாயீஸ் சங் யூனியன் போட்டியிட்டன.

இதில் அனைத்து இடங்களிலும் டி.ஆர்.இ.யு.வின் இயக்குநர் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலின் போது டி.ஆர்.இ.யு. 5 இயக்குநர்களைப் பெற்று ஆளும் நிர்வாகக்குழுவை அமைத்திருந்தது. எஸ்.ஆர்.எம்.யு. கடந்த தேர்தலில் 4 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது.

டி.ஆர்.இ.யு. ஆளும் நிர்வாகக்குழுவின் சிறப்பான செயல்பாடுகள். கன்ஸ்யூமர் லோனை தொழிலாளர் விரும்பும் கடைக்கு செக்காக கொடுப்பது, உடனடி லோன் சேங்ஷன், அதிக மதிப்பெண் பெற்ற ரெயில்வே தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பணம் வழங்குதல், பொருட்கள் வாங்குவதற்கான கடன் உதவி, இன்சூரன்ஸ் திட்டம் என டி.ஆர்.இ.யு அமல்படுத்தி வருகிறது.

சதர்ன் ரெயில்வே எம்ப்ளாயீஸ் கன்யூமர் கோ ஆப்பரேட்டீவ் சொசைட்டி கட்டிடத்தை கேரள மாநில முன்னாள் முதல்வர் தோழர் வி.எ.அச்சுதானந்தன் அவர்கள் சமீபத்தில் திறந்து வைத்தது நினைவிருக்கலாம். தற்போது, டி.ஆர்.இ.யு.வின் நேர்மையான செயல்பாட்டிற்கு பணபலத்தை மீறி, அதிகார பலத்தை மீறி தொழிலாளர்கள் வாக்களித்துள்ளனர்.
இந்த வெற்றி, வரப்போகும் அங்கீகார தேர்தலுக்கு முத்தாய்ப்பாக அமையும். பெரும் உற்சாகத்தை தொழிலாளர் மத்தியில் ஏற்படுத்தும்.

 

 delhi 3

 

delhi 4

Developed by ArcherWebsol Copyright © 2007-17 | DREU * CITU | All Rights Reserved
 
Go Top